உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்; பூஜாரிகள் வலியுறுத்தல்

கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்; பூஜாரிகள் வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் தமிழ்நாடு கிராம கோயில் பூஜாரிகள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மலைச்சாமி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். கிராம கோயில் பூஜாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை மாநில அரசு விரைந்து வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். கிராமப்புற கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோயில் பூஜாரிகள் நல வாரியத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !