வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜை
ADDED :1874 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. யோக நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.