உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் ரூ.17 லட்சத்தில் உயர் கோபுர விளக்குகள் அமைப்பு!

ராமேஸ்வரத்தில் ரூ.17 லட்சத்தில் உயர் கோபுர விளக்குகள் அமைப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பிற்காக, கோயில் வளாகத்திற்குள் ரூ.17 லட்சம் மதிப்பில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பிற்கு கோயிலின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் தேவையான இடங்களில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்பு கருதி கோயில் வடக்கு பகுதி, திருமதிலைச்சுற்றியிருந்த ஊழியர் குடியிருப்பு வீடுகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, இப்பகுதியில் பூந்தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில் வடக்கு மற்றும் தெற்கு நந்தவன வளாகத்திற்குள், ரூ.17 லட்சம் செலவில் இரண்டு உயர் கோபுர மின்விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. கோயில் பிரகாரங்களின் மேல் தட்டோடு பகுதியில், கோயில் காவல்  பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த போதிலும், போதிய அளவில் வெளிச்சம் இல்லாததால் பாதுகாப்பில் தொய்வு ஏற்பட்டது. இதனைக்கருத்தில் கொண்டு, இரவில் கோயில் கோபுரங்கள் மற்றும் பிரகார வளாகம் முழுவதிலும் வெளிச்சம் இருக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !