உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் குடிநீரின்றி பக்தர்கள் தவிப்பு!

திருத்தணி முருகன் கோவிலில் குடிநீரின்றி பக்தர்கள் தவிப்பு!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் போதிய குடிநீர் இன்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கிருத்திகை, சஷ்டி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குறைந்தபட்சம், 50 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவில் வளாகத்தில் குவிகின்றனர்.பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் சரியான முறையில் செய்து தரவில்லை. குறிப்பாக, மலைப் படிகள் வழியாக செல்லும் பக்தர்களுக்கு, போதுமான குடிநீர், கழிப்பறை வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. குடிநீருக்காக, மூன்று இடங்களில் தலா ஒரு குழாய் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் மலைக்கோவில் வளாகத்தில், மூன்று குழாய்கள் மூலம் தண்ணிர் வினியோகிப்பதால், அனைவரும் தண்ணீர் பிடிக்க முடியாமல் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. பற்றாக்குறைஒரு மாதத்திற்கு மேலாக, மலைக் கோவிலில் உள்ள புறக் காவல் மையம் அருகில் உள்ள குழாயிலும், அகிலாண்டம் அருகில் உள்ள குழாயிலும் குடிநீர் தினமும் வினியோகிக்கப்படுவது இல்லை. ஒரு குழாயில் மட்டும் குடிநீர் சப்ளை செய்வதால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். லாரிகளில் குடிநீர்இது குறித்து, கோவில் இணை ஆணையர் தனபாலிடம் கேட்ட போது, ""மலைக் கோவிலில் குடிநீர் வினியோகிக்கும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்ட குறைவு, மோட்டார் பழுது காரணமாக குடிநீர் பிரச்னை நிலவுகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க கோவில் நிர்வாகம், இரு லாரிகள் மூலம் குடிநீர் மலைக் கோவிலுக்கு கொண்டு வந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நிரப்பி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இனி குடிநீர் பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !