ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயில் ஆனி தேரோட்டவிழா கொடியேற்றம்!
ADDED :4898 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயில் ஆனி தேரோட்டவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் பெரியாழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி தேரோட்ட திருவிழா 28ம் தேதி நடக்கிறது. இதற்காக நேற்று கொடியேற்றுவிழா நடந்தது. இதையொட்டி, பெரியாழ்வாருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தன. அன்னபறவை முத்திரையிட்ட கொடி, மாடவீதிகளில் சுற்றி வர, கொடிமரத்தில் ரகுபட்டர் ஏற்றினார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான்பட்டர் சுதர்சனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.