அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம்!
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேர் வெள்ளோட்டம் நடந்தது. மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரானது 900 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேரை புதுப்பிக்கும் பணி , தமிழக அரசின் இந்து அறநிலைய துறையால் முக்குலத்தோர் உறவின்முறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தேருக்கான சக்கரம் செய்வதற்கு இந்து அறநிலைய துறை மூலம் ரூ. 5 லட்சம் செலவிடப்பட்டது. மற்ற மராமத்து பணிகளை ரூ.3 லட்சம் செலவில் முக்குலத்ததோர் உறவின்முறையினர் செய்தனர். பணி முடிந்துதேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.இதையொட்டி தேருக்கு அபிஷேகம், தீபாரதானைகள் செய்யப்பட்டன. தொழில் அதிபர் தினகரன் ,தாசில்தார் வேணுசேகரன், கோயில் நிர்வாக அலுவலர் குருஜோதி, ஆய்வாளர் மலையரச பாண்டியன், கவுன்சிலர் கண்ணன் வடம் பிடித்தனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலைக்கு வந்தது.