உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் தங்க தேர் புதுப்பிக்கும் பணி துவக்கம்

திருத்தணி கோவில் தங்க தேர் புதுப்பிக்கும் பணி துவக்கம்

 திருத்தணி-திருத்தணி முருகன் கோவிலில், ஏழு ஆண்டுகளாக பழுதாகி இருந்த தங்கத்தேரை புதுப்பிக்கும் பணிகளை, எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று துவக்கினார்.திருத்தணி முருகன் கோவிலில் இருந்த தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேரை, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மாடவீதியில் இழுத்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.இந்த இரு தேர்களை முறையாக பராமரிக்காததால், ஏழு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தன. கடந்த மாதம், அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர், திருத்தணி கோவிலில் ஆய்வு செய்த போது தங்கத்தேர், வெள்ளித்தேர் பழுது பார்க்கப்படும் என அறிவித்தனர்.இதில், முதற்கட்டமாக நேற்று தங்கத்தேர் பழுது பார்க்கும் பணியை, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி ஆகியோர் துவக்கினர்.இணை ஆணையர் பரஞ்ஜோதி கூறுகையில், தங்கத்தேர் சீரமைப்பு பணி, உபயதாரர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மரத்தேர் சீரமைப்பு பணி முடிந்ததும், தங்கத்தேர் சீரமைப்பு நடக்கும். மூன்று மாதத்தில் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !