உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதேவி கோயிலில் ஜூன் 24ல் கொடியேற்றம்

கண்டதேவி கோயிலில் ஜூன் 24ல் கொடியேற்றம்

தேவகோட்டை: சிவகங்கை, தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில், ஜூன் 24 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. புராதன கோயிலான சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி மற்றும் மாம்பழத் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. ஜூன் 24 காலை 7 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. அன்று மாலை காப்பு கட்டப்படும். எட்டு நாட்களும் சிறப்பு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கும். ஜூலை 2 ல், தேரோட்டம் நடக்க உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !