பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி 8ம் நாள் விழா
ADDED :1591 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவத்தில் 8ம் நாளன்று பெருமாள் நவநீத கண்ணனாக அருள் பாலித்தார். முத்துப் பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் மயில் கொண்டை சூடி, தவழும் திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் ஏந்தி, வெண்ணை உண்டபடி இருந்தார். அப்போது பக்தர்கள் சுவாமிக்கு வெண்ணெய், பால், தயிர்படைத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை குதிரை வாகனத்தில்கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.