மயிலம் கோவிலில் குரு பூஜை வழிபாடு!
ADDED :4854 days ago
மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் பாலசித்தருக்கு மகா குரு பூஜை வழிபாடு நடந்தது. மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பாலசித்தர் ஜீவசமாதியான இடத்தில் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா நடக்கிறது. இதன்படி நேற்று காலை 7 மணிக்கு பாலசித்தர் சுவாமிக்கு நடந்த மகா குரு பூஜை விழாவில் மயிலம் ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து நடந்த சமய சொற்பொழிவு நிகழ்ச்சியில் மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சென்னைப் பல்கலைக் கழக தத்துவத்துறை பேராசிரியர் ரத்தினசபாபதி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மயிலம் கல்லூரி முதல்வர் லட்சாராமன் வரவேற்றார். புதுச்சேரி தமிழாசிரியர் வேணுகோபாலன் மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் பேசினர்.