விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரத பூஜை துவக்கம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் இன்று (24ம் தேதி) விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார்.
ஆதிசங்கரர் பரம்பரையில் அவரது சீடர்களாக வழிவழியாக தொடர்ந்து வரக்கூடிய காஞ்சி காமகோடி பீடத்தின் 70ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (24ம் தேதி) காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை துவக்கினார். இவ்விரதம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி பௌர்ணமி அன்று நிறைவு பெறுகிறது. விரதத்தை முன்னிட்டு செப்டம்பர் 24-ஆம் தேதி விஸ்வரூப யாத்திரை நடைபெறுகிறது. இந்த சாதுர்மாஸ்ய விரத நாட்களில் சந்திரமௌலீஸ்வரர் பூஜை பீஷா வந்தனம் பஞ்சாங்க சதஸ் போன்ற கருத்தரங்குகளும் வேதங்களின் உரைகளான பாஷ்ய பாடங்களும் நான்கு வேதங்களும் நடக்கின்றன .இந்த விரதத்தின்போது அடுத்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியிடுவோர்களின் கலந்துரையாடல் ஜூலை 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.