கொரோனா நீங்க.. உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம்
ADDED :1636 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் வேதவியாசர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்து உலக மக்கள் நன்மை பெற வரதராஜ் பண்டிட் தலைமையில் விஷ்ணு சகஸ்ரநாம ஹோமம், வேதபாராயண கூட்டு பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் அறக்கட்டளை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.