தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் குரு பூர்ணிமா
ADDED :1530 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் நேற்று (24ம் தேதி) குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது. குரு பூர்ணிமா தினத்தில் தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் பூஜனீய தவத்திரு சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் அவர்கள் தஞ்சாவூர் மடம் மற்றும் சென்னை மடம் நடத்திய கொரோனா சேவை பற்றிய புகைப்படத் தொகுப்புகளை வெளியிட்டார். சுவாமி மாத்ருசேவானந்தர் வழங்கும் பக்திப்பாடல்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. குரு மகிமை பற்றி பேராசிரியை இந்திராம்மாவின் சிற்றுரை நடந்தது. குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பக்தர்களின் புஷ்பாஞ்சலி. குரு பூர்ணிமா தினத்தில் தஞ்சாவூர், ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி மாத்ருசேவானந்தர் வழங்கும் பக்திப்பாடல்கள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.