மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :1903 days ago
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த ம.குடிக்காடு முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுபாக்கம் அடுத்த ம.குடிக்காடு முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் செவ்வாடை அணிந்து, பால்குடம் சுமந்து, அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர், கிராம மக்கள் படையல் வைத்து வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.