உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை திருவிழா

வால்பாறை சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை திருவிழா

வால்பாறை: சோலையார் சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை திருவிழா நடந்தது.


வால்பாறை அடுத்துள்ள சோலையாறு சித்திவிநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா, கடந்த மே மாதம், 20ம் தேதி நடந்தது. அதனை தொடர்ந்து, இப்பகுதி பக்தர்களால் நாள் தோறும் மண்டல பூஜையும் நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறறது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ்டேட் அதிகாரிகள்  மற்றும் பக்தர்கள்  செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !