உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நிறைவு

காஞ்சிபுரம் கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கங்கையம்மனுக்கு கோடை உத்சவத்தின் நான்காவது நாளான நேற்று, சீர்கஞ்சி வார்த்தலுடன் விழா நிறைவு பெற்றது. 


காஞ்சிபுரம் வரதராஜபுரம் தெருவில், வரசக்தி விநாயகர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், கங்கையம்மன் கோடை உத்சவம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில், விழாவையொட்டி அன்று இரவு 7:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கும், வரசித்தி விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. இரண்டாம் நாள் உத்சவமான, கடந்த 4ம் தேதி இரவு 9:00 மணிக்கு சின்னவேப்பங்குளத்தில் இருந்து ஜலம் திரட்டும் நிகழ்வு நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையிலிடப்பட்டது. நான்காம் நாளான நேற்று மதியம் 12:00 மணிக்கு சீர்கஞ்சி வார்த்தலுடன் கங்கையமமனுக்கு கோடை உத்சவம் நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !