தேவனுாரில் தேர் வெள்ளோட்டம்
ADDED :1568 days ago
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்தது. வளத்தி அடுத்த தேவனுாரில் முத்தாலம்மன், கற்பூரம்மன், காளியம்மன் கோவிலில் புதிதாக தேர் செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. அதனையொட்டி அதிகாலை கணபதி ஹோமம், ரத சாந்தி பூஜையும், திருத்தேர் ஸ்தபதி நிகழ்த்தும் பரிகார பூஜையும் நடந்தது. ஏராமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.