உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்தியாநல்லுார் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா

அத்தியாநல்லுார் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.

விழா கடந்த 21ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு விழாவான சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 10.00 மணிக்கு அம்மன், விநாயகர், வீரன், முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5.00 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. அப்பகுதி பொதுமக்கள் சாகை வார்த்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி வீதிஉலா, நேற்று மஞ்சள்நீர் விளையாட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !