வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :4955 days ago
செஞ்சி : செஞ்சி தாலுகா வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந் தது. மாலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நள்ளிரவு 12 மணிக்கு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவை முன்னிட்டு பட்டி மன்றம், இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தன.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.