உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

செஞ்சி கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

செஞ்சி; செஞ்சி கோதண்டராமர் கோவிலில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் 9 கோவில்களில் இருந்து வந்திருந்த உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசிமக தீர்த்வாரி நடந்தது. இதில் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதர், செஞ்சி கோதண்டராமர் கோவில் சீதா தேவி, ராமர், லட்சுமணர், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், பீரங்கிமேடு காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர், திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசபெருமாள், சோழங்குணம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாச பெருமாள், நெகனுார் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள், பெரியகரம் முத்துமாரியம்மன், இல்லோடு ஏலவார் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் உற்சவர்கள் எழுந்தருளினர். காலை 10 மணிக்கு சங்கராபரணி ஆற்றில் தீர்த்வாரி நடந்தது. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர். செஞ்சி பஜனை கோஷ்யினரின் பக்தி பிரசங்கம், கோலாட்டம், கும்மியாட்டம், பஜனை மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அனைத்து கோவில்கள் சார்பிலும் அன்னதானம் வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !