சவலாப்பேரி நாராயணசாமி கோயிலில் ஆடி சிறப்பு வழிபாடு
ADDED :1620 days ago
திருநெல்வேலி: சவலாப்பேரி நாராயணசாமி கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. துாத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் உள்ள நாராயணசாமி
கோயிலில் ஆடி 2வது ஞாயிற்று கிழமையைமுன்னிட்டு நேற்று மதியம் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் உச்சிப்படிப்பு பாடி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீமன் நாராயணசாமி கோயில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.