காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
ADDED :1550 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 2ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.