கன்னியாகுமரி கோயிலில் மோகன் பகவத் தரிசனம்
ADDED :1611 days ago
நாகர்கோவில் : கன்னியாகுமரிக்கு3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்.
ஜூலை 25 மாலை கன்னியாகுமரி வந்த அவர் விவேகானந்தா கேந்திராவில் தங்கியுள்ளார். அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நேற்று காலை பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் நடத்தினார். கேந்திரா வளாக நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். அதன்பின் மாவட்ட அளவிலான ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்றும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாளை அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மதுரை வருகிறார்.