அயோத்தி - ராமேஸ்வரம் விமானம் இயக்க திட்டம்
ADDED :1588 days ago
ராமேஸ்வரம் : மத்திய அரசிடம் ஆலோசித்து, அயோத்தி - ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து துவக்கப்படும், என, உ.பி., போக்குவரத்து துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வந்த அவர், சுவாமி தரிசனத்துக்கு பின் கூறியதாவது:உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரானதும், ரவுடியிசம் மற்றும் கட்ட பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இம்மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்வதால், மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டு உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முடிந்ததும், மத்திய அரசுடன் ஆலோசித்து, ராமாயண வரலாற்றில் தொடர்புடைய அயோத்தி - ராமேஸ்வரம் இடையே, விமான போக்குவரத்து துவக்கப்படும். அடுத்தாண்டு உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.