உத்தரகோசமங்கை வாராஹி அம்மனுக்கு வளைகாப்பு
ADDED :1539 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் உள்ள வாராஹி அம்மன் கோயிலில் ஆடி கிருஷ்ண பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம் நடந்தது. மூலவருக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உற்ஸவ மூர்த்தியான அம்மனுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பூஜைகளை அர்ச்சகர் மங்களம் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.