பொறுத்தார் பூமி ஆள்வார்
ADDED :1641 days ago
இன்று விதைத்தால் நாளை மரம் வருமா... வராதல்லவா! அதேபோல் தான் ஒரு இலக்கை நோக்கி செல்லும்போதும் பொறுமைகாப்பது அவசியம்.
குத்துச்சண்டை போட்டிக்காக இரண்டு வீரர்கள் தயாராக இருந்தனர். அதில் ஒருவர் போட்டி துவங்கும்வரை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே இருந்தார். மற்றொருவர் அமைதியாக இருந்தார். ஆர்ப்பாட்டம் செய்தவர் போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே சக்தியை இழந்ததால் தோற்றார். பொறுமையாக இருந்தவரோ வெற்றி பெற்றார். பொறுத்தார் பூமி ஆள்வார்.