திருப்புத்தூர் யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1524 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யோக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பூஜைகள் நடந்தன. குன்றக்குடி தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவருக்கு அஷ்டமி தினங்களில் அஷ்ட பைரவர் யாகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொரோனா விதிகளால் யாகம் நடைபெறுவதில்லை. நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு காலை 11.30 மணி அளவில் சதாசிவம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்களின் சிறப்பு பூஜை நடந்து, அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூலவர் யோக பைரவர் சந்தனக்காப்பில் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார்.