கோவில்கள் மூடல்: தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :1522 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்திற்கு தடை விதித்ததால், ஏராளமான பக்தர்கள் அவதிப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க, முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன தடை குறித்து, கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு தான் தெரிவித்தது.இது தெரியாத வெளியூர் பக்தர்கள், நேற்று காலை ராமேஸ்வரத்தில் குவிந்தனர். தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தனுஷ்கோடி தேசிய சாலையும் மூடப்பட்டதால், சுற்றுலா பயணியர் வேதனை அடைந்தனர். நேற்று காலை 9:00 மணி முதல், வெளியூரில் இருந்து வந்த வாகனங்களை ராமேஸ்வரத்திற்குள் விட மறுத்து, போலீசார் திருப்பி அனுப்பினர்.தஞ்சை, திருவண்ணாமலை உட்பட முக்கிய கோவில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.