ஆடி கார்த்திகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி உள் புறப்பாடு
ADDED :1571 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக ஆடி கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி சன்னதி தெருவிலுள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருள்வர். மாலையில் அபிஷேகம், பூஜைகள் முடிந்து தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி முடிந்து கோயில் சென்றடைவார். கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று(ஆக. 2)முதல் ஆக. 8 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு நடக்க உள்ளது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.