உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் உழவார பணி

ராமேஸ்வரம் கோயிலில் உழவார பணி

 ராமேஸ்வரம்: கொரோனா பரவலை தடுக்க ராமேஸ்வரம், பழநி, மதுரை, திருச்செந்துார் உள்ளிட்ட முக்கிய இந்து அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆக.,1 முதல் 3 வரை தமிழக அரசு தடை விதித்தது. நேற்று ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் கிழக்கு ரதவீதியில் நின்று ராஜகோபுரத்தை தரிசித்து சென்றனர்.3 நாள் தடையை யொட்டி, கோயிலுக்குள் உழவார பணி நடத்தப்பட்டது. பக்தர்கள் நீராடும் தீர்த்த கிணறு பகுதியில் துாய்மை பணியாளர்கள் 70 பேர் சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !