அன்னூர் முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை வைபவம்
ADDED :1584 days ago
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், முருகன் கோவில்களில், ஆடிக்கிருத்திகை வைபவம் நடந்தது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சாலையூர், வாரணாபுரத்தில், பழமையான பழனி ஆண்டவர் கோவிலில், நேற்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவிலில், மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. எல்லப்பாளையம், கதவுகரை, கணேசபுரம், குன்னத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகப்பெருமானை வழிபட்டனர்.