உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் பெருந்துரய்மைத் திட்டம்

இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் பெருந்துரய்மைத் திட்டம்

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்துாய்மைத் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்படி ஆகஸ்ட் 2 முதல் 4ம் தேதி வரை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கர்ப்பகிரகம் , பிரகாரங்கள், திருக்குளங்கள் உள்ளிட்டவை துாய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்டவிருதுநகர் மாவட்டம் சாத்துார் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர்கள் ராமமூர்த்தி பூஜாரி, சௌந்தர்ராஜன் பூஜாரி, கண்ணன் பூஜாரி, முன்னிலையில் 50 பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோவில் சுற்று பிரகார மண்டபம், வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !