சதுரகிரியில் உழவாரப்பணி
ADDED :1638 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழித்தடங்களில் நீர்வரத்து ஓடைகள், நடைபாதைகளில் கிடந்த கழிவுகள் அகற்றபட்டது. கோவில் வளாகத்தில் ஊழியர்கள் உழவாரப்பணி செய்தனர். மேலும் ஆடி அமாவாசை வழிபாட்டிற்கான விஸ்வநாதன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.