சென்னையில் கோயில்கள் திறப்பு: பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி
ADDED :1641 days ago
சென்னை: சென்னையில் மூடப்பட்டிருந்த முக்கிய கோவில்கள், திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூன்று நாட்கள் கோவில்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று முதல் கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். சென்னை வடபழனி ஆண்டவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.