தட்சிணாமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்!
ADDED :4851 days ago
தென்காசி: தென்காசி தட்சிணாமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. தென்காசி ஆயிரப்பேரி ரோடு குரு தட்சிணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனை நடந்தது. மாலையில் புஷ்பாஞ்சலி நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த புஷ்பங்கள் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.