ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை; பாம்பன் பாலம் வெறிச்சோடியது
ADDED :1581 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு தடை விதித்ததால், பாம்பன் பாலம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
கொரோனா பரவலை தடுக்க ஆக., 1 முதல் 12 வரை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அரசு தடை விதித்தது.ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை இன்றி நகர் முழுவதும் வெறிச்சோடியதால் வியாபாரம் இன்றி முடங்கியது.சுற்றுலா பயணிகள் வருகையால் பரபரப்புடன் காணப்படும், பாம்பன் பாலத்தில், கடந்த இரு நாட்களாக மக்கள் நடமாட்டம் இல்லை.