உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை உத்தரவுப்பெட்டியில் அகத்தியர் ஜாதகம் பூஜை

சிவன்மலை உத்தரவுப்பெட்டியில் அகத்தியர் ஜாதகம் பூஜை

திருப்பூர் : சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், அகத்தியர் ஜாதகம், பச்சை வேட்டி - துண்டு, 500 ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கனவில் தோன்றும் பொருட்கள் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.முத்துார் வேலம்பாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவருக்கு கனவில் வந்த பொருட்கள் வைத்து நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அகத்தியரின் ஜாதகம், பச்சை வேட்டி - துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பிழந்த இரண்டு 500 ரூபாய் நோட்டு, நாணயங்கள், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜோதிடம், பாரம்பரிய வைத்தியம், ஞானத்தில் சிறந்து விளங்கியவர் அகத்தியர்; இவருடைய ஜாதகம் வைக்கப்பட்டுள்ளதால் அவரது வாக்குப்படி கிரக சஞ்சார பலன்கள் இருக்கும் என ஜோதிடர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிவன்மலை கோயில் சிவாச்சார்யர்கள் கூறுகையில்,பக்தி பெருகும். விவசாயம் தொடர்பான புதிய நிகழ்வுகள் நடக்கும். மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டு வைத்துள்ளது, பொருளாதார ரீதியான சரிவு ஏற்படுவதை குறிப்பதாக இருக்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !