முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு
ADDED :1519 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, காலை குடும்பத்தினருடன் வழிபட்டார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, ஏழுமலையானை தரிசிக்க நேற்று இரவு குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், காலை, வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள், வேத ஆசீர்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர். அவற்றை பெற்றுக் கொண்டு,கோவிலை விட்டு வெளியில் வந்த துர்காவுடன், பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின், திருச்சானுார் பத்மாவதி தாயாரை வழிபட்ட அவர், சென்னை புறப்பட்டுச் சென்றார்.