சிதம்பரம் நடராஜர் கோவில் அதிகாலையில் ஸ்லோகங்கள் ஒலிக்க கோரிக்கை
ADDED :1519 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நான்கு கோபுர வாயிலும் சிவமந்திரம் ஒலிக்கச் செய்ய வேண்டும் என பாஜ சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ராஜா சிதம்பரம் நகர தலைவர் ரகுபதி, மாநில நிர்வாகி கேப்டன் பாலசுப்பிரமணியன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் இடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அம்மனுவில், புண்ணிய பூமியான தில்லையிலே வீற்றிருக்கும் நடராஜ பெருமான் ஆலயத்தில் நான்கு கோபுர வாயில்களிலும் அதிகாலை சிவமந்திரம் ஒழிப்பதற்காக சிதம்பரம் நகர பாஜக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது பிக்சரில் ஆனால் தாங்கள் எங்களின் கோரிக்கையை ஏற்று தினமும் அதிகாலை பொதுமக்களுக்கு நல்ல ஸ்லோகங்கள் ஒலிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.