வெள்ளகோவில் கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :1635 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை சிறப்பாக நடந்தது. தமிழக அரசின் ஊரடங்கு காரணமாக இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளகோவில் அடுத்த ஓலப்பாளையம், முருக்கங்காட்டு வலசு தம்பிக்கலையசாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.