இருதய ஆண்டவர் தேர்பவனி விழா
ADDED :1564 days ago
இருதயபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இருதயபுரம், திரு இருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி விழா, ஆக.6 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மறுநாள் இரவில், மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேரில் இருதய ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்கு பாதிரியார் செபமாலை சுரேஷ் திருப்பலி நிறைவேற்றினார். விழாவின் கடைசி நாளான நேற்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.