வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா ஒத்திவைப்பு
ADDED :1562 days ago
பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் ஆடிப்பூர விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவின்போது தீர்த்தவாரி, ஆஞ்சநேயர் வாகனத்தில் சுவாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். கடந்த ஆண்டு கோரோனா பரவல் காரணமாக விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான பூர விழா நாளை (ஆக.11) வருகின்றது. கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க இக்கோயிலில் நடைபெற இருந்த ஆடிப்பூர விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.