விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூரம் சிறப்பு வழிபாடு
ADDED :1555 days ago
திருப்பூர்: வீரபாண்டியில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவிலில் நேற்று ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு வளைகாப்பு உற்சவம் நடந்தது. அம்மன் உற்சவருக்கு வளைகாப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடந்தது. 108 வகை மூலிகைகள், பழம், பூ, பலகாரங்கள், சித்ரான்னம் படைத்து யாகம் மற்றும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.