அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பிரமோற்சவ விழா
ADDED :1555 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1 முதல், ஆடி பிரமோற்சவ விழா நடந்து வந்தது. விழாவில் கொரோனா ஊரடங்கால், காலை, மாலை இரு வேளைகளிலும், விநாயகர், பராசக்தி அம்மன், மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் மட்டும் வலம் வந்தனர். விழாவின் நிறைவு நாளான நேற்று பத்தாம் நாள் விழாவில், சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பராசக்தி அம்மனுக்கு மாலையில் வளைகாப்பு நடத்தப்பட்டு, மூலிகை மருந்து நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. தீ மிதி விழாவும் ரத்து செய்யப்பட்டது.