மஞ்சனீஸ்வரர் கோவிலில் 16ம் தேதி தரிசனம் ரத்து
ADDED :1550 days ago
விழுப்புரம் : கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலில் வரும் 16ம் தேதி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வரும் 16ம் ஆடி ஐந்தாம் திங்களையொட்டி மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே. இக்கோவிலில் வரும் 16ம் தேதி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், ஆகம விதிப்படி பூஜை நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.