சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்
ADDED :1613 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுந்திர தினத்தையொட்டி கிழக்கு கோபுரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 75வது சுதந்திர தினத்தையொட்டி சபாநாயகர் கோவில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தது. நடராஜர் சன்னதி சித்சபையில் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசியக்கொடி வைத்து மேள தாளங்கள் முழங்க கிழக்கு கோபுரத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் கோபுரத்திற்கு தீபாராதனை வழிபாடு நடைப்பெற்று, கிழக்கு கோபுரம் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றி பறக்கவிட்டு மரியாதை செலுத்தினர். நம் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.