திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் தமிழ் அர்ச்சகர்
ADDED :1618 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் தமிழ் மொழி அர்ச்சகர் பணியில் சேர்ந்தார். கோயில்களிலும் தமிழக அரசு தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய 24 அர்ச்சகர்களை தேர்வு செய்துள்ளது. அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலுக்கும், திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலுக்கும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூமாயி அம்மன் கோயிலில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் திருபுவன வாசலைச் சேர்ந்த இளவழகன் 33 என்பவர் தமிழ் அர்ச்சகராக பணியில் சேர்ந்தார்.