திருப்பதியில் பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி
ADDED :1619 days ago
திருப்பதி: திருமலை திருப்பதியில் கருட பஞ்சமியை முன்னிட்டு உற்சவரான மலையப்பசுவாமி அவருக்கு பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் மலையப்பசுவாமி கருட வாகனத்தில் வலம்வருவார் அப்படி வரும்போது மூலவர் அணியும் காசு மாலை உள்ளீட்ட ஆபரணங்களை அணிந்து வருவதால் மூலவரான சீனிவாசப்பெருமாளே தங்களை காணவருவதாகக் கருதி பல லட்சம் பக்தர்கள் மலைக்கு திரண்டுவந்து சுவாமியை தரிசிப்பர். அத்துணை சிறப்பு மிக்க கருட வாகன உலா கருட பஞ்சமியில் மலை மீது விமரிசையாக நடைபெற்றது. கருட தரிசனத்தைக் காண்பது புது மணத்தம்பதிகளுக்கு ஏற்றது என்பதால் ஏராளமான புது மணத்தம்பதியினர் தரிசனத்திற்கு வந்திருந்தனர்.