உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை

மகா முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை, பழைய சந்தைப்பேட்டை பகுதியில், மகா முனீஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நான்காவது வாரத்தில், அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஆடி மாத விழா வெகு விமர்சையாக கொண்டாடவில்லை. நேற்று முன்தினம் முனீஸ்வரனுக்கு பொங்கல் வைத்து, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மட்டும் செய்யப்பட்டது. இதில் குறைவான பக்தர்கள் மட்டும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !