திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்ஸவம்
ADDED :1594 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் துவங்கியது. இக்கோயிலில் ஆவணி மாதம் பவித்ர உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். நேற்று 108 கலச அபிசேகம் நடந்து பெருமாளுக்கும், தேவியருக்கும் அபிசேகம் நடந்தது. தொடர்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று காலை பெருமாளுக்கு பவித்ர மாலை சாத்துதல் நடைபெறும். நாளை காலை நவகலச அபிசேகமும்,மாலையில் பெருமாள் தேவியருடன் புறப்பாடும் நடைபெறும். பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் மூலஸ்தானத்திற்கு புறப்பாடாகும்.